Kirjailijakuva
23 teosta 29 jäsentä 4 arvostelua

Tekijän teokset

Merkitty avainsanalla

Yleistieto

There is no Common Knowledge data for this author yet. You can help.

Jäseniä

Kirja-arvosteluja

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னேற்றங்கண்டு, உலக மயமாக்கலால் வையம் உருமாறி ஏற்றங்கண்டிருந்தாலும், அவற்றுள் இன்னும் மாறாமல் மூலைமுடுக்குகளில் சிக்கியிருக்கும் மனித மாசுக்களின் மீது விழும் எஸ்.ராமகிருஷ்ணனின் பார்வை இந்திய வானில் உலவுகிறது. தனி ஒரு மனிதனின் இடைவிடாத உழைப்பு... பொதுமக்களின் மீதான நம்பிக்கை... சமூகத்தின் மீதான அக்கறை... இந்திய மண்ணின்மீது கொண்ட நேசம்... கிராமத்து வாசிகளின் சுவாசம் ஏக்கத்துடன் நகரத்து காற்றில் கலக்கும் சோகத்தையும் - சென்னையின் இருண்ட காலத்தில் ஒளிந்திருந்த ஈர நெஞ்சங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். இன்று மாற்றமடைந்த கல்வியின் நிலைமையும், சீரடைய வேண்டிய கல்வி சார்ந்த அமைப்புகளின் அவலங்களையும் சுட்டிக்காட்டியிருப்பதோடு, பெண் சிசு மீதான தீய பார்வை நீங்கும் என்கிற நம்பிக்கையையும், பெண் குழந்தை பிறந்தால் மரம் நடும் மரபையும் ஒரு பசுமை கிராமம் வழியாக உணர்த்தியிருப்பதும் அற்புதம். ஆனந்த விகடனில் தொடராக பயணித்த ‘இந்திய வானம்’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டவும் பயண சுவாரஸ்யங்களுடன் பயணிக்கவும் தயாராகுங்கள்.… (lisätietoja)
 
Merkitty asiattomaksi
dearprakash | Jun 3, 2023 |
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.… (lisätietoja)
 
Merkitty asiattomaksi
dearprakash | Jun 3, 2023 |
ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான். அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதிற்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்த படிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில் மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது என்று ஒரு வரி இருக்கிறது. அதுதான் வாழ்வின் அரூபமான பயணம். துணையெழுத்தின் வழியாக என் வாழ்வை நானே அவிழ்த்துப் பார்த்துக்கொண்டேன். - எஸ். ராமகிருஷ்ணன்… (lisätietoja)
 
Merkitty asiattomaksi
dearprakash | Jun 3, 2023 |
சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது நினைவுகள் அவன் குரல் வழியாகவே சொல்லப் படுகிறது.… (lisätietoja)
 
Merkitty asiattomaksi
dearprakash | Jun 3, 2023 |

Tilastot

Teokset
23
Jäseniä
29
Suosituimmuussija
#460,290
Arvio (tähdet)
4.8
Kirja-arvosteluja
4
ISBN:t
21
Kielet
2